திருச்செங்கோடு நகராட்சி கூட்டம்

திருச்செங்கோடு நகராட்சி கூட்டம் நடந்தது.

Update: 2022-04-08 18:29 GMT
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு நகராட்சி கூட்டம் கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். ஆணையாளர் கணேசன், என்ஜினீயர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சொத்துவரி உயர்வை அமல்படுத்துவது குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கார்த்திகேயன், ராஜவேல் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்கள் சொத்துவரி உயர்வு மக்களை பாதிக்கும் என்றும், அதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் கூறினர். இதைத்தொடர்ந்து சொத்து வரி உயர்வை அமல்படுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் நகராட்சி துணைத்தலைவரும், நகர தி.மு.க. பொறுப்புக்குழு தலைவருமான கார்த்திகேயன் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்களான கலையரசி, சண்முகவடிவு, புவனேஷ்வரி, முருகேசன், சுரேஷ்குமார் மற்றும் சுயேச்சை கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்