நாமக்கல் நகராட்சியில் ‌சொத்து வரி சீராய்வு தீர்மானம் நிறைவேற்றம்

நாமக்கல் நகராட்சியில் ‌சொத்து வரி சீராய்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-04-08 18:28 GMT
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நகர்மன்ற கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் கலாநிதி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சுதா, துணைத்தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சொத்து வரி, காலிமனை வரி சீராய்வு செய்வதற்கான குழுவின் பரிந்துரைகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்கு தேவைப்படும் நிதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சொத்து வரி பொது சீராய்வு செய்யவேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன் அடிப்படையில் நாமக்கல் நகரில் உள்ள 39 வார்டுகள் ஏ, பி, சி என 3 மண்டலமாக பிரிக்கப்பட்டு சொத்து வரி மற்றும் காலிமனை வரி நிர்ணயம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த தீர்மானம் அனைத்து கவுன்சிலர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்