நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 55 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 55 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.;

Update: 2022-04-08 18:28 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் ரகசிய தகவல்களின் அடிப்படையில் 55 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும், நடைபெற்ற 110 குழந்தை திருமணங்களில் சம்மந்தப்பட்டவர்களின் மீது குழந்தை திருமண தடை சட்டம் 2006 மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் செய்வது குற்றமாகும். மீறுவோர் மீது குழந்தை திருமண தடை சட்டம், 2006-ன் படி, 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். குழந்தை திருமணம் பற்றி 181 மற்றும் 1098 என்ற இலவச எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்