மோகனூர் அருகே ஓட்டலுக்குள் ஜீப் புகுந்தது

மோகனூர் அருகே ஓட்டலுக்குள் ஜீப் புகுந்தது.

Update: 2022-04-08 18:28 GMT
மோகனூர்:
நாமக்கல் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் இருந்து பணியாளர்களை ஏற்றி கொண்டு ஜீப் ஒன்று மோகனூர் வந்தது. நள்ளிரவில் இந்த ஜீப் பணியாளர்களை இறக்கி விட்டு விட்டு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. மோகனூர் அருகே அணியாபுரம் 4 ரோடு சந்திப்பில் ஜீப் திடீரென கண்காணிப்பு கேமரா கம்பத்தில் மோதியது. பின்னர் சாலையோரம் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. ஜீப் மோதியதில் கண்காணிப்பு கேமரா கம்பம் மற்றும் ஓட்டலில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து மோகனூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்