கார் மோதி விவசாயி பலி

மோகனூர் அருகே கார் மோதி விவசாயி பலியானார்.

Update: 2022-04-08 18:27 GMT
மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள ராசிபாளையத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 65). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் மோகனூர்-வளையப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். செவிட்டுரங்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே சென்ற போது எதிரே வந்த கார் பழனியப்பன் மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்