வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பேற்றார்.

Update: 2022-04-08 18:16 GMT
வேலூர்

வேலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு நீதிமன்ற நீதிபதியாக மீனாட்சிசுந்தரம் நியமிக்கப்பட்டார். இதேபோல உறுப்பினர்கள் அஷ்கர்கான், மரியன்ராஜம் அனுகிரகா ஆகியோரும் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனர். நீதிபதி ஏ.மீனாட்சிசுந்தரம் கூறுகையில், கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வேலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு நீதிமன்ற நீதிபதி பணியிடம் காலியாக இருந்தது. தற்போது மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

மேலும் செய்திகள்