கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் திறப்பு ரூ.31 லட்சம் காணிக்கை வசூலானது
கொளஞ்சியப்பர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டதில் ரூ.31 லட்சம் காணிக்கை வசூலானது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்திப்பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 8 இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில், 4 உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் சங்கர் முன்னிலையில் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் 31 லட்சத்து 17 ஆயிரத்து 435 ரூபாய் வசூலாகி இருந்தது. மேலும், 78 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் வங்கி பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்றனர்.