வேம்பங்குடியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி
மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கியது.
கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் வேம்பங்குடி கலைவாணர் திடலில் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் கைப்பந்து போட்டிகள் நடத்தப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு போட்டியை நடத்த விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். 3 நாட்கள் நடக்கும் இந்த போட்டியையொட்டி இன்று மாலை கீரமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து செண்டை மேளம் முழங்க கைப்பந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஊர்வலமாக விளையாட்டு திடலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதையடுத்து கைப்பந்து போட்டியை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் கைப்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். 3 நாட்கள் நடக்கும் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் அணி, எஸ்.ஆர்.எம் அணி, ஐ.சி.எப் அணி, இந்தியன் வங்கி அணிகளும், மகளிர் பிரிவில் சிவந்தி கிளப் அணி, எஸ்.ஆர்.எம். அணி, ஐ.சி.எப் அணி, பி.கே.ஆர். அணிகளும் பங்கேற்கிறது.