இளம் விளையாட்டு வீரர்களை கண்டறிவதற்கான ஆக்கி போட்டி
இளம் விளையாட்டு வீரர்களை கண்டறிவதற்கான ஆக்கி போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
காட்பாடி
வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களை வழிநடத்தும் பொருட்டு அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டுவர ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு மையம் தேர்வு செய்யப்பட உள்ளது. அதற்குண்டான அடிப்படை வசதிகளை அளித்து, விளையாட்டு வீரர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதன் தொடக்கமாக வேலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆக்கி போட்டி நடந்தது. போட்டியை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து காட்பாடி வட்ட மையத்திற்கான அடிப்படை விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆலிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.