காரிமங்கலம் அருகே கார் மோதி மாட்டு வியாபாரி சாவு

காரிமங்கலம் அருகே கார் மோதி மாட்டு வியாபாரி இறந்தார்.

Update: 2022-04-08 17:55 GMT
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 55).  மாட்டு வியாபாரி. இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சேட்டு  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்