தர்மபுரியில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-08 17:55 GMT
தர்மபுரி:
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வாழைக்கன்று நட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சிங்கராயன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைபடுத்தி பண பலன்களை வழங்கவேண்டும். தொழில்நுட்ப ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்