ஊத்தங்கரை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
ஊத்தங்கரை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.;
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் பவுனம்மாள். இவரது மகள் ஜோலி (வயது 29). இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமடையாததால் மனமுடைந்த ஜோலி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.