கிருஷ்ணகிரி நகராட்சி சிறப்பு கூட்டத்தில் இருந்து அதிமுக பாஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கிருஷ்ணகிரி நகராட்சி சிறப்பு கூட்டத்தில் இருந்து அதிமுக-பாஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-04-08 17:54 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகராட்சியில் நேற்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் முருகேசன் முன்னிலை வகித்து கவுன்சிலர்களை வரவேற்றார். கூட்டத்தில் கிருஷ்ணகிரி நகராட்சியில் நியமனக்குழு, ஒப்பந்த குழு, வரி விதிப்பு மேல்முறையீடு குழு பதவிகளுக்கான மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற, 6 தி.மு.க., கவுன்சிலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் சொத்துவரி உயர்வு குறித்த சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் காயத்திரி தங்கமுத்து, எழிலரசி சரவணன், அமுதா, நாகஜோதி, சங்கீதா, விஜயா மற்றும் பா.ஜனதா கவுன்சிலர் சங்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகள்