கஞ்சா விற்ற 3 பேர் கைது
சிவகாசியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள மாரனேரி போலீசார் விளாம்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலின் அருகில் திருத்தங்கல் அண்ணா காலனியை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்பவர் நின்று இருந்தார். அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்த போது அவரிடம் 180 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் திருத்தங்கல் போலீசார் கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.