தேன்கனிக்கோட்டையில் சாலையை கடந்து சென்ற யானைகள்

தேன்கனிக்கோட்டையில் சாலையை யானைகள் கடந்து சென்றன.

Update: 2022-04-08 17:52 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை வனப்பகுதி மரகட்டா வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் இருந்து 5 யானைகள் பிரிந்து நேற்று மாலை அஞ்செட்டி சாலையை கடந்து தாவரகரை வனப்பகுதிக்குள் சென்றன.  இதையறிந்த வனத்துறையினர் யானைகளை பாதுகாப்பாக ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சாலையை யானைகள் கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்