சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்து, திருமணம் செய்த வாலிபருக்கு, 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-04-08 17:52 GMT
கிருஷ்ணகிரி:
சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்து, திருமணம் செய்த வாலிபருக்கு, 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வாலிபர் 
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த சின்னஆலேரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 27). கூலிதொழிலாளி. இவர் கடந்த, 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியயோடு, கடத்தி சென்று திருமணம் செய்தார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து கலையரசனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து நேற்று நீதிபதி லதா தீர்ப்பு கூறினார். 
 12 ஆண்டு சிறை 
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட கலையரசனுக்கு சிறுமியை கடத்தியதற்கு, ஓராண்டு சிறை, ரூ.1,000 அபராதம், சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றத்திற்கு, 10 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் மற்றும் குழந்தை திருமண சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை மற்றும் ரூ.2,500 அபராதம் என மொத்தமாக, 12 ஆண்டு சிறை மற்றும் ரூ.4,500 அபராதம் விதித்தார். 
மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜர் ஆகி வாதாடினார்.

மேலும் செய்திகள்