சொத்து வரி உயர்வை கண்டித்து ஓசூரில் பா ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து ஓசூரில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், சொத்து வரி உயர்வை கண்டித்து, ஓசூரில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் விஜயகுமார் வரவேற்றார். இதில், மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் மாநில செயலாளர் உமா ரதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், மாவட்ட பார்வையாளர் ஹரிகோடீஸ்வரன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள். மாவட்ட செயலாளர்கள் முருகன், சீனிவாசன், அன்பரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.