மனநலம் பாதித்த இளம்பெண் பலாத்காரம்

மனநலம் பாதித்த இளம்பெண் பலாத்காரம்;

Update: 2022-04-08 17:41 GMT
மனநலம் பாதித்த இளம்பெண் பலாத்காரம்
துடியலூர்

கோவை வடக்கு மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் மனநல காப்பகம் உள்ளது. இங்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட 22 வயது இளம்பெண் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அந்த இளம்பெண்ணின் வயிறு பெரிதாக இருப்ப தை அவரை பராமரித்து வரும் பெண் கவனித்து உள்ளார். அவர் இது பற்றி இளம்பெண்ணிடம் விசாரித்தார். 

அப்போது, அந்த காப்பக காவலாளி தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விதம் பற்றி கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.


இதில், அந்த காப்பகத்தில் காவலாளியாக பணியாற்றி வரும் தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த மொக்கையன் என்பவரின் மகன் லட்சுமணன் (வயது49), மனநலம் பாதித்த இளம்பெண் பலாத் காரம் செய்ததும், அதன் காரணமாக அந்த இளம்பெண் கர்ப்பமான தும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து லட்சுமணனை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்