தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

Update: 2022-04-08 17:38 GMT
தொழிலாளி தற்கொலை
சிங்காநல்லூர் 
கோவை இருகூர் இந்திரா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது58). ஓர்க்‌ஷாப் தொழிலாளி. இவரது இளைய மகன் சக்திகுரு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால்  மனவேதனை  அடைந்த விஜயகுமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். 

அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது அறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வர வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது விஜயகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்