கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-08 17:38 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேநேரத்தில் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதியிலும் போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் கணேஷ்நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஜீவாநகர் பஸ் நிறுத்த பகுதியில் நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மச்சுவாடியை சேர்ந்த கார்த்திக் (வயது 24), வண்டிபேட்டையை சேர்ந்த ரெங்கதுரை (22), வ.உ.சி.நகரை சேர்ந்த பார்த்திபன் (20) ஆகியோர் என தெரிந்தது. மேலும் அவர்கள் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா, ரூ.5,410, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்