தாராபுரம்,
தாராபுரத்தில் கடந்த 10 நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனால் சிறிது நேரத்தில் திடீரென பெய்ய தொடங்கிய மழை இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் வீட்டுக்கு திருப்பி செல்லும் அலுவலக பணியாளர்கள், மற்றும் கூலித்தொழிலாளர்கள், மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் நீடித்த கனமழையால் உடுமலை ரவுண்டானா அருகில் மழை நீருடன் சாலையில் சாக்கடை கழிவு நீர் பெருக்கெடுத்து ஒடியது.