6 பேர் மீது வழக்கு
இருதரப்பினர் மோதல் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
எஸ்.புதூர்,
ஆர்.பாலக்குறிச்சியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. ஆர்.பாலக் குறிச்சி அருகே உள்ள வைரவன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் வள்ளி லிங்கம் கோவிலில் இருந்து பூத்தட்டு எடுக்கும் போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக வைரவன்பட்டி கிராமத்தை சேர்ந்த 6 பேர் மீது சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.