ராணுவ வீரர் பணியின்போது மாரடைப்பால் மரணம்
ராணுவ வீரர் பணியின்போது மாரடைப்பால் மரணமடைந்தார்.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கரியாகுடல் ராமசாமி ரெட்டி தெருவை சேர்ந்த வெங்கடேசனின் மகன் குமார் (வயது 32). தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். ஆணழகன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வென்றுள்ளார். தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தன்னை தயார் செய்து வந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மாலை மாரடைப்பு காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது.
அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு, சொந்த ஊரான நெமிலி அடுத்த கரியாகுடல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. குமாருக்கு ஜெயப்பிரியா என்ற மனைவியும், யாஷிகா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். ஜெயப்பிரியா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.