வாகனங்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள்

சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வாகனங்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-04-08 17:21 GMT
சீர்காழி
சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வாகனங்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய பஸ் நிலையத்தில் கால்நடைகள் 
 சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலைய வளாகத்திற்குள் ஆடுகள் உள்பட கால்நடைகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வரும்போது இந்த கால்நடைகள் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். மேலும், திடீரென பிரேக் பிடிக்கும்போது பயணிகள் முன்னோக்கி விழும் சம்பவமும் நடக்கிறது.
சில நேரங்களில் கால்நடைகள் மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதிவிட்டால் அந்த கால்நடையின் உரிமையாளருக்கும், பஸ் டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு சில கால்நடைகள் பஸ்கள் சிறிது நேரம் நிற்கையில், அதன் அடிப்பகுதியில் படுத்துக் கிடக்கும்போது விபத்தில் சிக்கி கொள்கிறது.
நடவடிக்கை
 எனவே, சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வாகனங்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஸ் டிரைவர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்