பகவத் கீதை விளக்க நிகழ்ச்சி
மயிலாடுதுறையில் பகவத் கீதை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது
மயிலாடுதுறை
மயிலாடுதுறை நகர பா.ஜ.க. அலுவலகத்தில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் தமிழ் விளக்க உரை நிகழ்ச்சி நடந்தது. இதில், இஸ்கான் பிரபு என்பவர் கலந்து கொண்டு பகவத் கீதையின் சிறப்பு அம்சங்களை தமிழில் விளக்கினார். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பகவத் கீதை இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சியின் நகர தலைவர் மோடி கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் மயில் என்கிற ரவி, பாரதிகண்ணன், முட்டம் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.