விதைப்பண்ணையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு

விதைப்பண்ணையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு

Update: 2022-04-08 17:15 GMT
போடிப்பட்டி,
குடிமங்கலம் வட்டாரம் கொண்டம்பட்டி கிராமத்தில் நிலக்கடலை ஆதார நிலை இரண்டு விதைப்பண்ணையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார்.
நோய் எதிர்ப்புத் திறன்
அப்போது அவர் கூறியதாவது டி எம் வி 16 ரக நிலக்கடலை 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது 95 முதல் 100 நாட்களில் வளர்ந்து பலன் தரக்கூடியது.மற்ற நிலக்கடலை ரகங்களுடன் ஒப்பிடும் போது இதன் உரிப்புத் திறன் 70சதவீத எண்ணெய் 48சதவீதம் கொண்டுள்ளது. 
சராசரியாக இதன் 100 காய்களின் எடை 107 கிராம் என்ற அளவுக்கு இருப்பதால் ஏக்கருக்கு சராசரியாக 840 முதல் 912 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. மேலும் இது துரு நோய்க்கும் இலைப்புள்ளி நோய்க்கும் எதிர்ப்புத் திறன் கொண்டது.
தரமான விதைகள்
ஆதார நிலை விதைகளே சான்று செய்த தரமான விதைகளுக்கு மூலாதாரம் என்பதால் விதைப்பண்ணைகளில் உரிய நேரத்தில் ஆய்வு செய்து பயிர் விலகு தூரம் மற்றும் குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் குறித்த விதைச்சான்று நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். மேலும் அறுவடைக்குப் பிறகு நிலக்கடலை காய் ஆய்வு மேற்கொண்டு பொக்கு காய்களையும், நோய் பூச்சி தாக்கிய காய்களையும், பிற கலப்புகளையும் முழுமையாக அகற்ற வேண்டும்.  கலவன்கள் சதவீதம் 0.1-க்குள்ளும், குறைந்தபட்ச புறத்தூய்மை 96 சதவீதம் மற்றும் முளைப்புத்திறன் 70 சதவீத அதிக பட்ச ஈரப்பதம் சதவீதமாக இருப்பது மிகவும் அவசியமானதாகும். இதன் மூலம் விதைகளின் தரத்தை மேம்படுத்தி தரமான விதைகள் விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய முடியும் என்று அவர் கூறினார். இந்த ஆய்வின்போது விதைச்சான்று அலுவலர்கள் ஹேமலதா, ஷர்மிளா மற்றும் உதவி விதை அலுவலர்கள் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்