பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2022-04-08 17:12 GMT
ஆற்காடு

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்வு பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆற்காடு பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர்கள் சங்கர், பாலச்சந்தர் மற்றும் நிர்வாகிகள் அருண்குமார், ஹேம்நாத் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் செல்வகுமார் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் சுதாகர், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட தலைவர் முகமது காசிம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்