பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 19-ந் தேதி நடக்கிறது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வருகிற 19-ந் தேதியன்று பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரத்திற்கான பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி- கல்லூரிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் இந்த பேச்சு போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், விழுப்புரம் என்ற முகவரியை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.