மதுபாட்டில்கள் சாராயம் விற்ற 2 பேர் கைது

விழுப்புரத்தில் மதுபாட்டில்கள் சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2022-04-08 17:01 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் மழவராயனூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த பாபு (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் விழுப்புரம் நாயக்கன்தோப்பு பகுதியில் சாராயம் விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்