கல்லூரி மாணவரை தாக்கி கொலை செய்ய முயற்சி

கல்லூரி மாணவரை தாக்கி கொலை செய்ய முயன்ற சென்னையை சேர்ந்த 4 பேர் கைது

Update: 2022-04-08 16:51 GMT
செய்யாறு

செய்யாறு திருவோத்தூர் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மகன் பாபு (வயது 20), செய்யாறு அரசு கல்லூரியில் படித்து வருகிறார்.

 இவர் ஒரு ஆண்டுக்கு முன்பு கொரோனா காரணமாக சென்னையில் உள்ள கால் சென்டரில் வேலை செய்துள்ளார். 

அப்போது இன்ஸ்ட்ராகிராம் மூலம் சென்னை ரெட்டேரியைச் சேர்ந்த முகம்மது பைசல் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக பாபுவை பெட்சீட் வியாபாரம் செய்ய முகம்மதுபைசல் அழைத்தார். 

கொரோனா தடைகள் நீங்கிய நிலையில் கல்லூரியில் படிப்பதற்காக செய்யாறுக்கு பாபு வந்துவிட்டார்.

 கடந்த 5-ந் தேதி முகம்மது பைசல் பெட்சீட் கொண்டு வந்துள்ளேன். வந்து வாங்கிச்செல் என்று பாபுவை போன் மூலம் அழைத்துள்ளார். 

அதனால் பாபு செய்யாறு கோனேரிராயன் குளக்கரை பகுதிக்கு சென்றபோது, முகம்மது பைசல் மற்றும் அவருடன் வந்த 3 பேர் சேர்ந்து பாபுவை சரமாரியாக  தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாபுவை அவரது அண்ணன் சதீஷ் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகம்மது பைசல், பெரம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (20), பிரபு (30), திருவள்ளூர் கொளத்தூரைச் சேர்ந்த ஜேசுராஜ் (47) ஆகியோரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்