நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது மினிலாரி மோதி தொழிலாளி பலி

நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது மினிலாரி மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2022-04-08 16:46 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளியை அடுத்த ஏழரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 65), கூலி வேலை செய்து வந்தார்.  தனது மொபட்டில் நாட்டறம்பள்ளி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வளைவில் சென்ற போது எதிரே கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த மினி லாரி மொபட் மீது மோதியது.

இதில் சம்பத் படுகாயமடைந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சம்பத் மகன் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்