கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தேர்வு கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-04-08 16:38 GMT
சீர்காழி
கல்லூரி தேர்வு கட்டணத்தை உயர்த்திய பாரதிதாசன் பல்கலைக் கழகத்தை கண்டித்து சீர்காழி அருகே சட்டநாதபுரம் ரவுண்டானாவில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அமுல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரபு, நிர்வாகி விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு தேர்வு கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்