தூக்குப்போட்டு பெண் தற்கொலை

வேதாரண்யம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-08 16:10 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி முதலியார் தோப்பை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி ராதிகா  (வயது32).  இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் நேற்று ராதிகா வீட்டில் தூக்குப் போட்டு கொண்டார்.  உடனே  அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டா்கள், ராதிகா  ஏற்கனவே இறந்து விட்டதாக  தெரிவித்தனர்.  இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா  மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதிகா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்