காந்தி அமைதி விருதுடன் ரூ.1 கோடி பரிசு பெற விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தை சேர்ந்வர்கள் காந்தி அமைதி விருதுடன் ரூ.1 கோடி பரிசு பெற விண்ணப்பிக்க வருகிற 11-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-08 16:04 GMT
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தை சேர்ந்வர்கள் காந்தி அமைதி விருதுடன் ரூ.1 கோடி பரிசு பெற விண்ணப்பிக்க வருகிற 11-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்தி அமைதி விருது
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், நாட்டிற்கு பெருமை தேடித் தரும் வகையில் காந்திய வழியினை பின்பற்றி தொண்டு செய்து வரும் தனிநபர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு காந்தி அமைதி விருதுடன் ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 
அதன்படி, நடப்பு ஆண்டிற்கான காந்தி அமைதி விருது மற்றும் பரிசு பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காந்தியின் 125-வது பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘காந்தி அமைதி விருது அவரது கொள்கைகளை நினைவு கூரும் வகையில் அவருக்கு புகழஞ்சலி செலுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ரூ.1 கோடியும், வாழ்த்து மடலும் வழங்கப்படும்.
புத்தகங்கள் 
 ஒவ்வொரு ஆண்டும் பிரதமரை தலைமையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தேர்வாளரால் விருது பெறுபவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.இந்த விருது தனி நபருக்கோ, நிறுவனங்களுக்கோ, சமூக பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களுக்கு அகிம்சை முறையில் பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. 
மேலும் காந்திய வழியில், மனித துயரங்களை அகற்றுவதற்கும் முக்கியமாக சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மக்களுக்கும், சமூக நிதி மற்றும் இனக்கமான நிலையை ஏற்படுத்துபவர்களுக்கும் வழங்கப்படுகிறது. .
11-ந்தேதிக்குள்...
 இவ்விருத்திற்கான விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆதார ஆவணங்களுடன் வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை)மாலை 5 மணிக்குள் நாகை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்