நட்சத்திர ஓட்டலில் ரூ.1¾ லட்சம் திருட்டு; ஊழியர் கைது
கொடைக்கானலில் நட்சத்திர ஓட்டலில் ரூ.1¾ லட்சம் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பொது மேலாளராக ராஜ்குமார் ராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5-ந்தேதி இவர், ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை தனது அலுவலக அறையில் வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றார்.
பின்னர் மறுநாள் காலையில் ஓட்டலுக்கு வந்த ராஜ்குமார் ராமன், தனது அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அவரது பணம் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிைலயத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் ஓட்டல் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது அதே ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வரும் கொடைக்கானல் பர்ன்ஹில் ரோடு பகுதியை சேர்ந்த கார்மேகம் மகன் ராஜ் (வயது 22) என்பவர் நள்ளிரவில் ராஜ்குமார் ராமனின் அலுவலக அறைக்கு சென்று பணத்தை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து ராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர்.