விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

வாய்மேடு அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-08 15:39 GMT
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி நைனான் குத்தகை பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது40). கூலி தொழிலாளி. இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் தொல்லை காரணமாக  நேற்று முன்தினம்  சுகாதகர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்)எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட சுதாகருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்