அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்க வேண்டும்

உயர்கல்வி படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000 உதவி தொகை வழங்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-04-08 15:22 GMT
வேதாரண்யம்:
உயர்கல்வி படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000 உதவி தொகை வழங்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
வேதாரண்யத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அமைப்பின் மாவட்ட தலைவர் இந்திர சித்தன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புயல் குமார், மாவட்ட பொருளாளர் மதியரசு, வட்டார தலைவர் ஆனந்த்முருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில அமைப்புச் செயலாளர் முரளி, மாவட்ட நிர்வாகிகள் ஜெயசீலன், அம்பிகாநிதி, கணேசன், சாந்தி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ரூ.1,000 உதவித் தொகை
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி படிக்க 7.5 இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையும் இணைத்து இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
 அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் அரசின் உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கும் வழங்க வேண்டும். 
ஊக்க ஊதியம்
கடந்த ஆண்டு மார்ச் முதல் நிறுத்தப்பட்டுள்ள உயர் கல்விக்கான 6 சதவீத ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைேவற்றப்பட்டன. முன்னதாக வட்ட செயலாளர் செந்தில்நாதன் வரவேற்றார். முடிவில் நீலமேகம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்