கும்மிடிப்பூண்டி அருகே குட்கா கடத்திய 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த தச்சூர் பகுதியில் கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில், கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்னை நோக்கி சென்ற சந்தேகத்திற்கு இடமான ஒரு காரை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர்.அந்த காரில் தடை செய்யப்பட்ட 350 கிலோ எடைகொண்ட குட்கா பொருட்கள் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் பயணம் செய்த திருவள்ளூரை சேர்ந்த பிரதாப் (வயது 29) மற்றும் சென்னையை சேர்ந்த சேத்தன் சிங் (33) ஆகியோரை கைது செய்தனர். குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.