சந்தக்கடை மாரியம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றம்
சந்தக்கடை மாரியம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றம்
கூடலூர்
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல்கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் சொந்த செலவில் கட்டப்பட்ட அன்னதான மண்டபம், சிறப்பு பூஜைகளுடன் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருகிற 18-ந் தேதி தேர் வீதி உலா நடக்கிறது.