இரும்பு தடுப்பில் சிக்கிய லாரி

இரும்பு தடுப்பில் சிக்கிய லாரி;

Update: 2022-04-08 14:51 GMT
ஊட்டி

ஊட்டியில் படகு இல்ல சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அதற்கு முன்பாக அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் குறிப்பிட்ட உயரம் வரையிலான இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஊட்டியில் இருந்து காந்தலுக்கு கம்பளி ஆடைகள் ஏற்றி சென்ற லாரி அந்த சாலையில் சென்று கொண்டு இருந்தது.

 அப்போது லாரியின் மேற்பகுதி இரும்பு தடுப்பில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்ல முடியவில்லை. இதன் காரணமாக அங்கு பிற வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு, லாரி மீட்கப்பட்டது. மேலும் இரும்பு தடுப்பு சேதமடைந்ததால், உடனடியாக அகற்றப்பட்டது. அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்