விதிகளை மீறிய தங்கும் விடுதிக்கு சீல்
விதிகளை மீறிய தங்கும் விடுதிக்கு சீல்
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் அனுமதி இல்லாத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் இன்று ஊட்டி சர்ச்ஹில் பகுதியில் நகரமைப்பு ஆய்வாளர் மீனாட்சி மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்று தங்கும் விடுதியாக மாற்றி செயல்பட்டு வந்த கட்டிடத்தை அலுவலர்கள் மூடி சீல் வைத்தனர். மேலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஊட்டி நகராட்சியில் விதிமுறைகளை மீறி 1,300 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடங்கள் மீது சீல் வைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிடும்போது சீல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து விதிமுறைகளை மீறிய கட்டிடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.