விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை;

Update: 2022-04-08 14:51 GMT
கூடலூர்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மகன் அஜித்குமார்(வயது 25). இவர் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நியூஹோப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்