கொடைக்கானல் வனப்பகுதியில் அரியவகை பறவைகள் கண்டுபிடிப்பு

கொடைக்கானல் வனப்பகுதியில் அரியவகை பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டது.;

Update: 2022-04-08 14:48 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானலில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த மாதம் 26, 27-ந்தேதிகளில் நடைபெற்றது. இதில் வனத்துறையினர், மாணவ-மாணவிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த குழுவினர் வனப்பகுதியில் வலம் வந்த பறவைகளை புகைப்படம் எடுத்தனர். 
இதில் அடர்ந்த வனப்பகுதியில் பல்வேறு வண்ணங்களில் ஆன குருவி இனங்கள், காட்டுமைனாக்கள், மீன்கொத்திகள், மரங்கொத்திகள், பார்பெட், செம்மீசை கொண்டை குருவி, புல்புல்  பறவை மற்றும் மயில்கள் ஆகியவை ஏராளமான அளவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் டாக்டர் திலீப் அறிவுரையின் பெயரில் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் அரிய வகை பறவைகளின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இவை தனியாக புத்தகமாக பிரசுரிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்