கூத்தாநல்லூர் பகுதிகளில் பரவலாக மழை

கூத்தாநல்லூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Update: 2022-04-08 14:45 GMT
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்தது. மதியம் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து லேசான தூறலுடன் தொடங்கிய மழை கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், ராமநாதபுரம், திருராமேஸ்வரம், கோரையாறு, ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், நாகங்குடி, பழையனூர், அதங்குடி, வெள்ளக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும்,  சாலைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.

மேலும் செய்திகள்