விளாத்திகுளத்தில் பெட்டிக் கடையில் திருடிய வாலிபர் சிக்கினார்
விளாத்திகுளத்தில் பெட்டிக்கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்த முகமது காசிம் மகன் ஜாகிர் உசேன் (வயது 51). இவர் விளாத்திகுளம்- எட்டயபுரம் ரோடு பகுதியில் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து அதிலிருந்த ரூ.750 மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த சன்னாசி மகன் சண்முகராஜ் (32), ஜாகிர் உசேனின் பெட்டிக்கடையில் திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து விளாத்திகுளம் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சண்முக ராஜாவை கைது செய்து அவரிடமிருந்து பணத்தையும் சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.