போலீசாருக்கு 13 ரோந்து வாகனங்கள். சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வழங்கினார்
போலீசாருக்கு 13 ரோந்து வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வழங்கினார்.
வேலூர்
போலீசாருக்கு 13 ரோந்து வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வழங்கினார்.
ரோந்து வாகனம்
வேலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது வேலூர் மாவட்டத்தில் 5 கார்கள் உள்பட 47 ரோந்து வாகனங்கள் உள்ளன. நேற்று கூடுதலாக 13 ரோந்து மோட்டார்சைக்கிள் போலீசாருக்கு வழங்கப்பட்டது. இதனை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் கூடுதலாக 15 வாகனங்கள் வாங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள், அலாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளதால் ரோந்து வாகனம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.
நடவடிக்கை
இந்த வாகனங்கள் லத்தேரி, பனமடங்கி, பரதராமி உள்ளிட்ட போலீஸ் நிலைய பகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளது. எங்கேயாவது அசம்பாவிதம் அல்லது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக ரோந்து வாகனத்தில் போலீசாரை அனுப்பி உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.