வாணியம்பாடி அருகே ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

வாணியம்பாடி அருகே ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-08 12:55 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பச்சூர் உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் இருந்து பக்கத்து மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ்க்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவுக்கு கடத்துவதற்காக 22 மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசியை கட்டி ெரயில் நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த பச்சூரை சேர்ந்த மகாலிங்கம் மகன் ஆனந்தராஜ் (வயது 24) என்பவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்