மது விற்ற 3பேர் கைது
ஆறுமுகநேரி பகுதியில் மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் தலைமையில் போலீசார் வடக்கு பஜாரில் உள்ள செல்வராஜ் மகன் பாலாஜியின் பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அங்கு அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆறுமுகநேரி மெயின்பஜாரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலுக்கு பின்புறம் வேல்முருகன் என்பவர் மது விற்றுக ்கொண்டிருந்தார். அவரிடம் இருந்து10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் காயல்பட்டினம் வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவர், அதே பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்தார். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.