இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

வாணாபுரம் அருகே இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Update: 2022-04-08 12:06 GMT
வாணாபுரம்

வாணாபுரம் அருகே உள்ள அத்திபாடி பகுதியை சேர்ந்தவர் பிரவின். இவரின் மனைவி ஐஸ்வர்யா (வயது 22). சம்பவத்தன்று அவரது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாபு (47), அவரது மகன் மனோஜ்குமார் (20) ஆகியோர் சேர்ந்து ஐஸ்வர்யாவை தகாத வார்த்தைகளால் பேசி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்