மான்கறி வாங்கி வந்த சிறுவனுக்கு ரூ35 ஆயிரம் அபராதம்
மான்கறி வாங்கி வந்த சிறுவனுக்கு ரூ35 ஆயிரம் அபராதம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அரசந்தாங்கல் பகுதியில் வனச்சரகர் சீனிவாசன் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் வந்த 17 வயது சிறுவனை அவர் துரத்தி சென்று பிடித்தார்.
அப்போது அவனிடம் சுமார் 5 கிலோ மான்கறி இருந்ததும், கொண்டம் கிராமத்தில் இருந்து வாங்கி வந்ததும் தெரியவந்தது.
மேலும் சிறுவனின் தந்தை கொண்டம் நரிக்குறவர் காலனியில் மான்கள் வேட்டையாடும் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்து உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த சிறுவனுக்கு மான்கறி வாங்கி வந்த குற்றத்திற்காக ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
மேலும் சிறுவனின் தந்தையை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.